Pages

Thursday 22 March 2018

23 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK Sneha, BK Akila



23 March 2018 Tamil Murli - BK Saravana Kumar



Yoga practice through murli - BK Akila

Hit the play button below to turn the player on or off.


Murli Churning by BK Akila

குழந்தைகளாகிய நம்மை எப்போது 5 விகாரம் என்ற அசுத்தம் தீண்டுகிறதோ அப்போது தரக்குறைவு அதிகரிக்கிரது, நாம் மேண்மையானவர்களாகி  மற்றவர்களையும் மாற்ற வேண்டும்.

மேண்மையாவதற்காக குறைந்தது 8 மணிநேரம் தந்தையின் சேவையை செய் வேண்டும், தந்தையை நினைவு செய்ய வேண்டும் அல்லது சுய தரிசன சக்கரத்தை சுற்றுதல் கூடவே சங்கொலியை கொடுத்து இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலர் போல இருந்து தந்தையிடம் ஆஸ்தியை பெற வேண்டும்.

சத்யுகத்தில் எந்த குறைவானக் காரியமும் நிகழவில்லை குஷி குஷியாக இருந்தோம். ராஜா ராணியைப் போல பிரஜைகளுக்கும் மகிமை பாடப்படுகிறது. இப்போது ராஜா ராணியைப் போல பிரஜைகளும் தூய்மை இழந்து விட்டனர்.

இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். எதுவெல்லாம் புரிந்திருக்கிறோமோ  அதை மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும் என்று தந்தை கூறுகின்றார்.


எல்லா நன்மைகள் செய்து விட்டு நீங்கள்  மறைந்து விடுகிறீர்கள் என தந்தையின் மகிமை பாடுகிறோம். நிராகார பகவான் அவசியம் வர வேண்டியிருக்கிறது.

தந்தை பதீத பாவன், எப்போது இந்த முழு உலகமும் தூய்மை இல்லாமல் ஆகிறதோ அப்போது தான் அவர் வர வேண்டியிருக்கிறது. அவர் வந்து அனைத்து ஆத்மாக்களையும் தூய்மையாக ஆக்க வேண்டும்.


கிறிஸ்துவிற்கு 3000 ஆண்டிற்கு முன்பு சொர்க்கம் இருந்ததாக கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர். இதன்படி ஐயாயிரம் ஆண்டுகள் கல்பத்தின் ஆயுள் என்றால், பிறகு சத்யுகத்திற்கு லட்சம் ஆண்டுகள் என்று கூறுகின்றனர். இதை தந்தை புரிய வைக்கிறார், இதை நல்லமுறையில் தாரணை செய்து மற்றவர்க்கு புரிய வைக்க வேண்டும்.

சிவபாபாவின் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும்.அப்போது தான் தேவி தேவதையாக ஆக முடியும். ஆனால் ஸ்ரீமத்படி நடப்பது கிடையாது. தந்தையை நினைவு செய்ய விடாத அளவிற்கு மாயை இருக்கிறது.

பாவச் சுமைகள் அதிகம் இருக்கின்றன. சிலர் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கலாம். எட்டு மணி நேரம்  உத்தியோகம், பாக்கி என்ன நேரம் இருக்கிறதோ அதில் நினைவு செய்ய வேண்டும். குறைந்தது 8 மணி நேரம் சேவை செய்யுங்கள், தந்தையை நினைவு செய்யுங்கள், சுயதரிசன சக்கரம் சுற்றுங்கள், சங்கு ஊதுங்கள்.

தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்தது யார் என்பதை மறந்துவிடுகிறோம் மற்ற தர்மத்தை ஸ்தாபனை செய்தவர்கள் யார் என்பது  நினைவில் இருக்கிறது. சொர்க்கத்தை உருவாக்கும் தந்தையின் நினைவுச் சின்னத்தை மறைத்து விட்டனர்.

நரகத்தை உருவாக்கியவரின் நினைவுச் சின்னத்தை வைத்து நாளுக்கு நாள் தரக்குறைவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

யாருக்காவது கோபம் வருகிறது என்றால் புரிந்து கொள்ள வேண்டும் என்னிடத்தில் இந்த பூதம் இருக்கிறது, பிறகு நான் என்னை உயர்ந்தவர் என எப்படி கூறி முடியும்? உயர்வானவர்களாக ஆவதற்கான முயற்சி நிச்சயம் செய்ய வேண்டும்.

தந்தையின் நினைவு மற்றும் ஞானக் கடலின் ஞானத்தின் நினைவின் மூலம ஒவ்வொரு அடியிலும் தந்தையிடமிருந்து வழி பெற்று உள்ளுக்குள் இருக்கும் பூதங்களை விலக்கி உயர்ந்வராக ஆக வேண்டும்.

யார் புத்திசாலி ஆத்மாவோ அவர் கேட்கமலேயே உதவி கிடைக்கும். யாசிக்கும் பலக்கம் இருக்காது.மாறாக மாஸ்டர் வள்ளலாக இருப்பார்கள்.

தன் புத்தி மனம் பழக்கங்களின் மீது ராஜியம் செய்பவரே சுயராஜிய அதிகாரி ஆவார்.








No comments:

Post a Comment

Please watch this basic rajayoga course video first, to understand murli videos easily

Blog Archive

Spirituality