Pages

Tuesday 20 March 2018

20 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK Sneha, BK Akila





20 March 2018 Tamil Murli - BK Saravana Kumar



Yoga Practice based on yesterday's murli - BK Akila



தீய சகவாசம் சந்தேக புத்தியை ஏற்படும்  இதனால் படிப்பை நிருத்தி விடும்படி ஆகிவிடும். எனவே எப்போதும் ஒரு தந்தையுடன் மட்டுமே சகவாசம் வைத்துக்கொல்ல வேண்டும்.

எப்படி தாமரை நீரில் இருந்தாலும் சேறு நீர் ஒட்டுவதில்லையோ அதே போல இல்லற விவகாரத்தில் இருந்து கொண்டே விகாரத்தை தீண்டாமல் இருக்க வேண்டும் என்பது தந்தை கொடுக்கும் ஸ்ரீமத்தாகும். இதனை கடைபிப்பதன் மூலம் நாம் சோழியிலிருந்து வைரத்துக்கு சமமாக சொர்கத்தின் அதிபதியாகிறோம்.

பகவானுவாச  (பகவான் கூறுகிறார்). நான் உங்களை சொர்க்கத்திற்கு அதிபதி, ராஜாக்களுக்கெல்லாம் ராஜா ஆக்குகிறேன். இது தான் கீதை ஆகும்.

படைப்பவர் என்று ஒரே ஒரு நிராகாரமானவருக்குத் தான் புகழ் பாடப்படுகிறது. சாகாரத்தில் இருப்பவரை ஒரு பொழுதும் படைப்பவர் என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.


யாராவது இறந்து விட்டால் சொர்க்கவாசி ஆகி விட்டார் என்று கூறுகிறார்கள். சொர்க்கம் நினைவு செய்கிறார்களென்றால், அவசியம் சொர்க்கம் ஏதோ நல்ல உலகாக இருந்திருக்க வேண்டும்.

நரகத்தில் யார் இறக்கிறார்களோ அவர்கள் மறுபிறவி நிச்சயம் நரகத்தில் தான் எடுக்க வேண்டி இருக்கும். எப்படி கர்மம் செய்கிறார்களோ, அதற்கேற்ப இங்கு பிறவி எடுக்க வேண்டியிருக்கும்.

இது விகாரம் என்ற விஷம் நிறைந்த உலகம். சொர்கத்தில் இந்த விஷம் கிடையாது அங்கு மிருகங்கள் கூட பிற உயிருக்கு தக்கம் கொடுக்காது.

நல்ல சேர்க்கை உயர்த்தும், தீய சேர்க்கை வீழ்த்தும். இது சத்தியமானவரின் சேர்க்கை, சத்சங்கம் ஆகும். அவரது ஸ்ரீமத்படி நடந்தால் நாம் புது உலகத்தில் வந்து விடுவோம். நிச்சயத்தில் சந்தேகம் வந்து விடுகிறது என்றால், ஆஸ்தி கிடைக்காது.

 இது போல நிறைய பேர் நிச்சயம் ஏற்பட்டு, பிறகு சந்தேக புத்தி உடையவர்களாக ஆகி விடுகிறார்கள். நீங்கள் இறைவனினுடையவராக ஆக வேண்டுமா? இல்லை இராவணனினுடையவராக ஆக வேண்டுமா?

சேவாதாரி குழந்தைகள் சேவை செய்யும்போது தான் செய்தேன் என நினைத்தால் முழுவதும் பலனற்று போய்விடும்.

எங்கு கருவி என்ற பாவம் (உள்ளுணர்வு) உள்ளதோ அங்கு பணிவினுடைய பாவம் இயல்பாக இருக்கும். நிமித்தமாக செய்கிறேன், பணிவுள்ளவன் ஆவேன் என்றால், மாயை வர முடியாது.

தானும் பிரிசுத்தமாகி பிறரையும் பரிசுத்தமாக்குவது  தான் பரிசுத்த அன்னங்களின் சேவையாகும்.


No comments:

Post a Comment

Please watch this basic rajayoga course video first, to understand murli videos easily

Blog Archive

Spirituality